-ஞானத்தமிழ்-
யாழ்ப்பாணக் கல்வி வலயத்தால் தரம் 6 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வுகள் நடாத்தப்படவுள்ளன.
இச் செயலமர்வில் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் 25 திகதி சனிக்கிழமை வரை 4 தினங்கள் யா.கோண்டாவில் இராமகிருஸ்ண மகா வித்தியாலாயத்தில் 2026 ஆண்டு தரம் 6 இற்கு கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் 24 திகதி வெள்ளிக்கிழமை வரை 3 தினங்கள் யா.திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலாயத்தில் 2026 ஆண்டு தரம் 6 இற்கு சைவசமய பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 25 திகதி சனிக்கிழமை வரை 3 தினங்கள் யாழ் மறைக்கல்வி நடுநிலையத்தில் 2026 ஆண்டு தரம் 6 இற்கு கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்கத் திருமறை பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெறவுள்ளது.
இச் செயலமர்வு இத் தினங்களில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை நடைபெறவுள்ளதாகவும் உரிய ஆசிரியர்களை செயலமர்வுகளில் பங்கு பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















