-அனைத்தும் பொய் என்கிறார் திஸ்ஸ விகாரை விகாராதிபதி-
யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்தில் புதிதாக புத்தர் சிலை நிறுவப்படவுள்ளதாகவும், பெரஹரா நடத்தப்படவுள்ளதாகவும் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என திஸ்ஸ விகாரையின் விஹாராதிபதி நந்தாராம தேரர் தெரிவித்திருக்கின்றார்.
தையிட்டி விகாரையில் உள்ள விகாராதிபதியின் வாசஸ்தலத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தையிட்டியில் திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 03ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள்தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் விகாராதிபதியாக நான் எதற்கும் இடமளிக்கவில்லை. தெற்கில் இருந்து புத்தர்சிலை எடுத்து வருவதாகவும், அன்றைய தினம் விசேட பெரஹரா நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் நான் எவ்வாறான விசேட அனுமதியும் எதற்கும் கொடுக்கவில்லை. அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என கோருகிறோன். தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள என அரசாங்கத்தால், புதிய குழு அமைத்துள்ளார்கள், அந்த குழுவிடம் எமது விகாரைக்கான ஆவணங்களை கையளித்துள்ளோம். அதேபோன்று காணியை உரிமை கோரும் நபர்களும் தமது காணி தான் என்பதற்கான ஆவணங்களை கையளித்துள்ளோம்.
இந்த விவாகரத்தில் இதொரு சட்டவிரோத செயல் என தீர்பளிக்கப்பட்டால் இதனையும் ஏற்க நான் தயார். விகாரை காணி விடுவிப்பு தொடர்பில் இதுவரை யாரும் என்னுடன் பேசவில்லை. அரசாங்கத்தின் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
அதற்கு மதிப்பளித்து விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என உறுதியளிக்கிறேன் என்றார்.


















