-அன்ரனி திலக்-
வடமராட்சி கிழக்கு, மாமுனை வீதி புனரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையினால் மாமுனை வீதியின் புனரமைப்பு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.
புனரமைப்பு பணிகள் இடம்பெறும் குறித்த வீதியினூடான போக்குவரத்துகள் எதுவும் 12.01.2026 தொடக்கம் 15.01.2026 வரை தற்காலிகமாக இடம்பெற மாட்டாது என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


















