யாழ். புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் கல்விப் பணியில் 150 ஆவது ஆண்டு நிறைவு ஆரம்ப விழாவும், ஸ்தாபகர் சாள்ஸ் தினமும் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது .
பாடசாலை அதிபர் கு.லெனின்குமார் தலைமையில் நடைபெற உள்ள நிகழ்வின் முதன்மை விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவியும், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முதன்மை முகாமைத்துவ உத்தியோகத்தருமாகிய திருமதி. மெ.ய.சக்திஜீபன் கலந்து கொள்ள உள்ளார்.
ஆரம்ப நிகழ்வாக யாழ். மரியன்னை பேராலயத்தில் பழைய மாணவர்களான அருட் தந்தையர்களால் காலை 7.45 மணிக்குத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.


















