2025ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 198 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தையும், தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 194 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தையும் பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.



















