-த.சுபேசன்-
வரணி , இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் தரம் – 5 புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு அதிபர் தி. அபராஜிதன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலர் எப்.சி. சத்தியசோதி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.ஜெயரூபன், கௌரவ விருந்தினராக கொடிகாமம் ஹற்றன் நஷனல் வங்கி முகாமையாளர் க.முகந்தன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


















