-செ.ரவிசாந்-
சுன்னாகம் வர்த்தக வங்கியினர், தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினர், தெல்லிப்பழை தாய்மார் கழகங்கள் இணைந்து முன்னெடுக்கும் பெண் நலம் காப்போம் எனும் தொனிப் பொருளிலான பெண் புற்றுநோய் விழிப்புணர்வு செயலமர்வு, தொற்றாநோய் ஆய்வு மார்பக மற்றும் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் ஆய்வுப் பரிசோதனை என்பன இன்று புதன்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணி வரை தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணப் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஆறுமுகம் கேதீஸ்வரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். குறித்த நிகழ்வில் பெண் புற்றுநோயியல் வைத்திய நிபுணர் தனுஜாவின் சிறப்புரை மற்றும் மருத்துவ ஆய்வு ஆலோசனைகளும் இடம்பெறும். இந்த நிகழ்வில் அனைத்துப் பெண்களையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


















