-பா.பிரதீபன்-
கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கதென குறிப்பிட்ட
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சுவாத்தை நடத்தாது நிபந்தனைகளை முன்வைப்பது பொருத்தமில்லையெனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை அவர் நடத்திய ஊடக சந்திப்பில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும்; தெரிவிக்கையில்:
எமது நிபந்தனைகளை ஏற்றால் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படுவதற்கு தமிழ் கட்சிகளுக்கு தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.எ.சமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் அவர் நிபந்தனைகள் எதுவென்று குறிப்பிடவில்லை. நிபந்தனைகள் என்னவென இதுவரை தெரியாத நிலையில் எவ்வாறு பேச்சுவார்த்தை ஊடாக இணைய முடியும்.
ஜனாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் உள்ளன. இக் கூட்டமைப்புக்கு யாப்பு உள்ளது. பொதுசின்னம் உள்ளது. இவ்வாறான நிலையில் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படுவதற்கு பொதுசின்னம் என்ன, யாப்பு தேவை. இந்நிலையில், நிபந்தனைகளை முன்வைப்பதற்கு முன்னர் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். பேச்சுவாத்தை நடத்தாது நிபந்தனைகளை முன்வைப்பது பொருத்தமில்லை என்றார்.


















