-பா.பிரதீபன், கஜிந்தன்-
வட்டுக்கோட்டை – அராலிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை வீட்டில் வைத்து விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்தபோதே அவர் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டார்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சான்றுப் பொருட்களுடன் (21 கால்போத்தல் சாராயம்) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















