-கஜிந்தன்-
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதியிலேயே இந்த உணவு அறை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்ட யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உணவு அறையை திறந்து வைத்ததையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.பி.ரி.கொஸ்தா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜே.எஸ்.ஜயமால் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


















