-செ.ரவிசாந்-
மகாஜன சிற்பி தெ.து.ஜயரத்தினம் நினைவு தினமும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர் துரையப்பா பிள்ளை மண்டபத்தில் அதிபர் இ.புஸ்பரட்ணம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜமுனா ராஜசீலன் பிரதம விருந்தினராகவும், யாழ். மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.புராதனி மதனரஞ்சன் கலந்து கொண்டு நினைவுப் பேருரை ஆற்றுவார்.


















