-ஞா.தமிழ்ச்செல்வன்-
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள கரவெட்டி பிரதேச செயலக பிரிவு மகளிர் அபிவிருத்தி நிலையத்திற்கு ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் டிப்ளோமா பயிற்சிநெறிகளுக்கு பயிற்சியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இப்பயிற்சி நெறிகள் ஒரு வருட காலத்தைக் கொண்டது. நாளாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவாக 300 ரூபா வீதம் 20 நாட்களுக்கு வழங்கப்படுவதுடன் இக்கற்கை நெறிக்கு 18 வயது தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்ட பெண்கள்.
க.பொ.த. சாதாரண தரம் கற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி கிளையில் சமர்ப்பிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு கிராம அபிவிருத்தி பிரிவு அலுவலர்களை தொடர்பு கொள்ள 0764178658 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















