டித்வா புயலால் நாட்டில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களை யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வழங்கியுள்ளது.
கிளிநொச்சி, மன்னார் மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 15 இலட்சம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அந்தந்த மாவட்ட செயலர்களிடம் வணிகர் கழக நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிவாரணப் பொருட்கள் மாவட்ட செயலகம் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவுள்ளன.
யாழ். வர்த்தகர்களின் பாரிய நிதிப்பங்களிப்போடு யாழ். வணிகர் கழகம் ஊடாக குறித்த மனிதாபிமானப் பணி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















