-இ.கலைஅமுதன்-
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராசாவின் 83 ஆவது பிறந்த தினமான நேற்று அவரது இல்லத்தில் நினைவேந்தல் நடைபெற்றது.

மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற நினைவேந்தலில் மறைந்த மாவை சேனாதிராஜாவின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவை சேனாதிராஜாவின் குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


















