-செ.ரவிசாந்-
இயற்கைப் பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் சார்பாக 50 கிலோ அரிசிப் பொதிகள் நேற்று வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் விதையனைத்தும் விருட்சமே இளைஞரணியினரிடம் ஆலய முன்றலில் வைத்து ஆலய ஆதீனகர்த்தா சிவஸ்ரீ.ந.ரங்கநாதக் குருக்களால் நேரடியாக அரிசிப் பொதிகள் கையளிக்கப்பட்டன.


















