-செ.ரவிசாந்-
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் கந்தசஷ்டி விரத உற்சவம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் ஆறு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக உற்சவம் இடம்பெறும்.
இன்று காலை 6 மணிக்கு உஷக்காலப் பூசை, 7 மணிக்கு 108 சங்காபிஷேகம், 8:30 மணிக்கு காலைச்சந்திப் பூஜை, 9 மணிக்கு திருச்செந்தூர் புராணப் படிப்பு ஆரம்பம், முற்பகல் 11:30 மணிக்கு வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து வீதி உலா, பிற்பகல 12:30 மணிக்கு உச்சிக்காலப் பூஜையைத் தொடர்ந்து திருவருட்பிரசாதம் வழங்குதல் நடைபெறும்.
மாலை 5 மணிக்கு 108 சங்காபிஷேகம், 6:30 மணிக்கு சாயரட்சைப் பூஜை, 7:20 மணிக்கு இரண்டாம் காலப் பூஜை, இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப் பூஜை. தொடர்ந்து வீதி உலா, இரவு 10 மணிக்கு அர்த்தசாமப் பூஜை தொடர்ந்து திருவருட் பிரசாதம் வழங்குதல் இடம்பெறும்.
கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் அடியவர்கள் தங்கள் பெயர், விபரங்களைக் காரியாலயத்தில் பதிவு செய்து கொள்ள முடியுமென மாவை ஆதீன கர்த்தா சிவஸ்ரீ மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் தெரிவித்தார்.















