-த.சுபேசன்-
சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபான சாலைகள் ஆகியவை எதிர்வரும் மாவீரர் தினத்தன்று மூடுவதற்கு பிரதேச சபை ஏகமனதாக தீர்மானித்திருக்கின்றது.-
சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் இ.யோகேஸ்வரன் வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட அமர்வில் மேற்படி விடயம் தொடர்பாக கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்த நிலையில் அதற்கு சக உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர் ஆகியோர் ஆதரவு வழங்கி மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சபைத் தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் (நவம்பர்-27) அன்று சபை எல்லைக்குட்பட்ட சகல இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபான சாலைகள் ஆகியவற்றை மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















