-செ.ரவிசாந்-
வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம் மாவீரர் நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை புதன்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை வல்வெட்டித்துறை நகராட்சி மன்றப் பொது மண்டபத்தில் (மரக்கறிச் சந்தை மேல்மாடி) இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரும் பங்கேற்று உயிர்காக்கும் உன்னத இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


















