யாழில் துணிகள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றிற்கு நிறமூட்ட பயன்படுத்தும் நிறமூட்டியை சேர்த்து சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு மிட்டாய்களை தயாரித்த நிறுவனங்களுக்கு 252,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
நீர்வேலிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிக்கு முன்பாக இருந்த விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இனிப்பு மிட்டாயின் மாதிரிகள் கடந்த 10 ஆம் மாதம் பெறப்பட்டு அனுராதபுரத்தில் உள்ள அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
குறித்த மிட்டாய்கள் தொடர்பாக கிடைத்த பகுப்பாய்வு அறிக்கையில் அந்த இனிப்புகளில் துணிகளுக்கு மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றிற்கு நிறமூட்ட பயன்படுத்த ரொடமன் டீ எனும் நிறமூட்டி பன்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிமன்றத்தில் குறித்த மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்மந்தப்பட்ட இரு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் 126,000 ரூபா வீதம் 252,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. மேலும் தண்டத் தொகையினை செலுத்த தவறினால் 18 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.


















