-த.சுபேசன்-
மீசாலை மேற்கு வீனஸ் சனசமூக நிலையத்தின் சிறுவர் மகிழ்களம் நிகழ்வு வீனஸ் முன்பள்ளி வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
ஓய்வு பெற்ற திறைசேரி கணக்காளர் சிவகுருநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வடிவேலு ஸ்ரீபிரகாஸ் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் பழனி குகனேஸ்வரன், குழந்தைகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு வைத்தியர் செல்வி மோனாலிசா சிவகுருநாதன் ஆகியோரும்,
கௌரவ விருந்தினர்களாக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி செல்வராணி, நகரசபை உறுப்பினர் அ. பாலமயூரன், வீனஸ் சனசமூக நிலைய ஆரம்பகால உறுப்பினர் கனகு தம்பையா, வீனஸ் முன்பள்ளியின் ஓய்வுநிலை ஆசிரியை திருமதி மகேஸ்வரி, மீசாலை மேற்கு கிராம உத்தியோகத்தர் திருமதி அகல்யா, மீசாலை மேற்கு சமுர்த்தி உத்தியோகத்தர் வைத்திலிங்கம் கிருஸ்ணராஜ்,
மீசாலை மேற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கார்த்திகா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
வீனஸ் சனசமூக நிலைய ஸ்தாபகர் தம்பையா கௌரவிப்பு, வீனஸ் முன்பள்ளி ஓய்வுநிலை ஆசிரியை கௌரவிப்பு, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர் கௌரவிப்பு, சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்தி பெற்ற மாணவி கௌரவிப்பு, உயர்தரத்தில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவி கௌரவிப்பு ஆகியவையும் நிகழ்வில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















