-த.சுபேசன்-
சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அனுசரணையில் மீசாலை கிழக்கு சரஸ்வதி சிறுவர் கழகம் நடத்திய சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் மீசாலை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தன.

யோ.திசாணன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சிப் பிரதேசசெயலர் சத்தியசோதி கலந்து கொண்டிருந்தார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி சமுர்த்தி தலைமையக காப்பாளர் வசந்தி ஜெயக்குமார்,தென்மராட்சி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்க முகாமையாளர் திருமதி உமாதேவி, வரணி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் பொ.குகதாஷ் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமதி அருட்சோதி சிவசுப்பிரமணியம் மற்றும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் வ.பிரகாஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதன்போது சிறுவர், முதியோர் கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.















