-கஜிந்தன்-
முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் 18 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான விஜிமருகன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
ஆரம்பத்தில் இறைவழிபாடு இடம்பெற்று அதனைத் தொடர்ந்து ஈகைச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. பின்னர் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. இறுதியாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வாசுதேவக்குருக்கள், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


















