இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழாவும், ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வும் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளன.
திருவுருவச் சிலை திறப்பு மாவிட்டபுரத்தில் இன்று காலை 9 மணிக்கும் நினைவஞ்சலி நிகழ்வு முற்பகல் 11 மணிக்கு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலை அரங்கிலும் நடைபெறும்.
திருவுருவச் சிலையை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் ந. நல்லுசாமி, யாழ். இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி ஆகியோர் திறந்து வைக்கவுள்ளனர். நினைவுப் பேருரையை மறவன்புலவு சச்சிதானந்தம் ஆற்றவுள்ளார்.
ஈழ அண்ணல் மாவை சோ. சேனாதிராசா நினைவுமலர் வெளியீட்டுரையை புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் பாஞ். இராமலிங்கம் ஆற்றவுள்ளார்.


















