-க.கனகராசா-
வடமாகாண பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான பரீட்சைகள் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரைக்கும், தரம் 10, தரம் 11 மாணவர்களுக்கான பரீட்சைகள் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரைக்கும், தரம் 3, தரம் 4, தரம் 5 மாணவர்களுக்கான பரீட்சைகள் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.


















