உலக வர்த்தகர்களையும், தாயக வணிகர்களையும் இணைக்கும் வர்த்தகப்புரட்சி மாநாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
‘வாணிபம் செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இம்மாதம் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 2 மணி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சர்வதேச நாடுகளின் தூதரகங்கள், உலக வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தாயக தொழில் முனைவோர் ஒன்றிணையும் இந்த மாநாட்டில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு +94764328771 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















