யாழ்ப்பாணம் மயிலிட்டியில் வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர், இராணுவ வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த நவரட்ணம் எனும் முதியவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை அவர் தனது மிதிவண்டியில் வீதியால் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர், அதே இடத்தில் பலியானார்.
அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இராணுவ வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

















