-வடமராட்சி கிழக்கில் பயங்கரம்-
-சி.ஜெகதீஸ்வரன்-
யாழ்.வடமராட்சி கிழக்கு – வத்திராயன் வீரபத்திரர் கோவிலடியில் நேற்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வத்திராயன் வடக்கு, தாளையடியைச் சேர்ந்த சின்னையா தவநேசன் (வயது – 40) என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் சடலம் மருதங்கேணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.


















