யாழில் மூன்று மோட்டார் சைக்கிள்களும், துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாகவும்,
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியுள்ளது. பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளது. இந்தநிலையில், விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


















