-சி.ஜெகதீஸ்வரன்-
உரும்பிராய்ப் பகுதியில் அயல் வீட்டிற்கு பத்திரிகை படிக்கச் சென்ற வயோதிபர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் உரும்பிராய் தெற்கு செல்வாபுரம் பகுதியைச் சேர்ந்த மூக்கன் கணேஸ் (வயது 84) என்ற வயோதிபர் ஆவார்.
நேற்று திங்கட்கிழமை அவர் வழமைபோன்று அயல் வீட்டிற்கு பத்திரிகை படிக்கச் சென்ற போது மயங்கி வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இம் மரணம் தொடர்பில் யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை கோப்பாய் பொலிசார் நெறிப்படுத்தினர்.


















