-க.சபேஷன்-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, யாழ். நகரை அண்டிய பகுதிகளில் , 10 பேர் ஐஸ் போதைப்பொருளுடனும், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 9 பேர் போதை மாத்திரைகளுடனும், 4 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


















