-சி.ஜெகதீஸ்வரன்-
ஆரோக்கியமாதா கோவில் பலாலி வடக்கு பகுதியில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த இளைஞன் மாரடைப்பு காரணமாக இறந்ததாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை அன்ரனி புஸ்பராசா (வயது-23) என்ற இளைஞர் ஆவார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இம் மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை பலாலி பொலிசார் நெறிப்படுத்தினர்.


















