-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 3 நாளில் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களும் போதைமாத்திரை, ஹெரோயின், மாவா என்பனவற்றுடன் 6 சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்தி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


















