-பிரபாகரன்-
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அநுர குமார திசாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இந் நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள பிராந்திய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் யாழ் மாவட்ட செயலக கட்டிடத்தின் 60ஆம் ஆண்டினை முன்னிட்டு வெளியிடப்பட்ட தபால் முத்திரை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் ஜனாதிபதிக்கு வழங்கிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏனையவர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர்களான உபாலி சமரசிங்க, சுனில் வட்டகல, பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன்,
ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.



















