-ஞானத்தமிழ்-
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரனையுடன் வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே திறந்த பிரிவாக வினாடி வினா போட்டியை நடாத்தவுள்ளது.
இவ் வினாடிவினாப் போட்டி குழுப் போட்டியாகவும் தரம் 8 முதல் தரம் 10 வரையான மாணவர்களை உள்ளடக்கிய 5 பேரை கொண்ட குழுவாக அமைய வேண்டியதுடன், இப் போட்டி தமிழ், இலக்கியம் மற்றும் பண்பாடுகள் சார்ந்த விடயங்கள், இலங்கை சார்ந்த பொதுஅறிவு, சர்வதேச விடயங்களை உள்ளடக்கிய பொது அறிவு, யாழ்ப்பாண பொதுசன நூலகத்தின் வரலாறு மற்றும் விளையாட்டு, சினிமா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாக 5 சுற்றுக்கள் நடைபெறவுள்ளது.
மேலதிகத் தகவல்களை 021 222 6025 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்குபற்ற விரும்பும் பாடசாலைகள், பங்குபற்றவுள்ள மாணவர்களின் விபரங்களை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு முன்பாக நேரடியாக மற்றும் தபால் மூலம் பிரதம நூலகர், யாழ்.பொதுசன நூலகம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கும் mcjaffnamailm@gmail.com அல்லது mcjaffnamailm@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது . போட்டியில் வெற்றிபெறும் பாடசாலைக்கு விருதும், 25 ஆயிரம் ரூபா பெறுமதியான நூல்களும் இரண்டாவது பாடசாலைக்கு விருதும், 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நூல்களும் வழங்கப்படவுள்ளன.


















