யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரியின் சரஸ்வதி கலையரங்கில் பீடாதிபதி இராசையா லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மொழித்துறைத் தலைவர் பேராசியர் சி.சிவலிங்கராசா கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக கொழும்பு தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் மொழித்துறைப் பணிப்பாளர் கலாநிதி முருகு தயாளினி,இலங்கை வங்கி முகாமையாளர் இ.இரத்தினராஜ், இமையாணன் அ.த.க.வித்தியாலய அதிபர் சி.லிங்கனதாஸ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
















