யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட வணக்கஸ்தலங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
யாழ்.மாநகர பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்,
மாநகர வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களப்பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
























