யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசாவும், சிறப்பு விருந்தினர்களாக கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி கி.சண்முகநாதனும் ஊடகத் துறைப் பேராசிரியர் சி.ரகுராமும் கலந்து சிறப்பித்தனர்.
கனலி சஞ்சிகை வெளியீட்டைத் தொடர்ந்து சஞ்சிகைக்கான கருத்துரையினை கல்வியியல் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நிகழ்த்தினார். சஞ்சிகை வெளியீட்டினைத் தொடர்ந்து மாணவர்களால் இயக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டன.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊடகத் துறை சார்ந்தோர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


















