ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தினம் இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வு மதியம் 12 மணிக்கு ஆரம்பித்ததுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

















