யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும், 5 அடி நீளமான வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் கூரையின் உள்பகுதியில் மறைத்துவைக்கப்பட இரண்டு மகசின்களும், வயர்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக நூலக வளாகத்தில் திருத்த வேலை நடைபெற்ற போதே குறித்த பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்த துப்பாக்கி பாகங்கள் இரண்டையும், வயர்களையும் மீட்டுச் சென்றனர்.


















