-த.கலைஅமுதன்-
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 94 ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது.

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். பொதுசன நூலகத்தின் இந்தியன் கோனரில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரக தலைமை நிர்வாக அதிகாரி சி.ரம்யா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், யாழ். பொதுசன நூலக பிரதம நூலகர் மற்றும் நூலக ஊழியர்கள், இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
அப்துல் கலாமின் நினைவாக நூலக வளாகத்தில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டது.



















