-செ.ரவிசாந்-
அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், கைதடி மண்ணைச் சேர்ந்த வைத்திய நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை இந்த மாதம் 6 ஆம் திகதி சிங்கப்பூர் நாட்டில் சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.
இதனைக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


















