-க.கனகராசா-
வடக்கு மாகாணத்தில் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்வதற்கான ஆதரவு குறிப்பு நூல் ஆளுநருக்கு வழங்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநருக்கும், வவுனியா கிராமிய பெண்கள் அமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பிலேயே வடக்கு மாகாணத்தில் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்வதற்கான ஆதரவு குறிப்பு நூல் ஆளுநருக்கு வழங்;கப்பட்டது. அத்துடன் தம்மால் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் அதன் ஊடாக கிடைக்கப் பெற்ற தகவல்களை ஆளுநருடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் பங்கேற்றார்.















