இலங்கையின் வடக்கு கடற்பகுதி ஊடாக இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க ஹெலிகொப்படர் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட தெற்கு மற்றும் மேற்கு கடல்களைக் கண்காணிக்க மூன்று விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் வடக்கு கடல்களில், விசேடமாக இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான சரக்கு இயக்கத்தைக் கண்காணிக்க ஒரு ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.


















