-கஜிந்தன்-
வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து 25 முதிரை மரக்குற்றிகளை மீட்கப்பட்ட பொலிஸார் இது தொடர்பில் சந்தேகநபரொருவரையும் கைது செய்துள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போதே அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருந்த மரக்குற்றிகள் மீட்கப்பட்டதாகவும் கைதான சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


















