-த.சுபேசன்-
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணிப் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக வீட்டில் இருந்து காணாமல் போன பெண் ஒருவர், காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
வரணிப் பகுதியைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவரே இவ்வாறு காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டார்.
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


















