-ஞானத்தமிழ்-
அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் பொ.சிவரஞ்சன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.சிவசிவா பிரதம விருந்தினராகவும், சங்கானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எப்.எக்ஸ்.பெனின் றோஷான் சிறப்பு விருந்தினராகவும், நிறுவுனர் குடும்பம் சார்பாக சு.விக்கினேஸ்வரன் மற்றும் பழைய மாணவர் சங்கச் செயலாளர் மா.நாகரட்ணம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர். பழைய மாணவரும் விரிவுரையாளருமான ஸ்ரீ. குகதாசன் நிறுவுனர் நினைவுப் பேருரையை நிகழ்த்தவுள்ளார்.

















