-ஞானத்தமிழ்-
வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு சேர். வைத்திலிங்கம் துரைச்சுவாமி மண்டபத்தில் அதிபர் வீ.இ.ஹஸ்ரன் றோய் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பழைய மாணவரும் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் பிரதான உள்ளகக் கணக்காய்வாளருமான ஜி.காண்டீபன் பிரதம விருந்தினராகவும், பழைய மாணவியும் வடக்கு மாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளருமான திருமதி வேழினி பாலேந்திரா, வேலணை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஏ.ஜெயக்குமாரன், வேலணை பிரதேச கலாசார உத்தியோகத்தர் த. ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் தொழிலதிபர் நா.ஜெகதீஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.


















