-புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள்-
புத்தாண்டை வரவேற்கும் முகமாக சாவகச்சேரி நகரம் மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து செய்து வைக்கப்பட்டது.
நேற்று மாலை 6.30 மணியளவில் நகராட்சி மன்ற தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து மின்னொளி அலங்காரத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
வரலாற்றில் முதல்தடவையாக மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்ட சாவகச்சேரி நகரத்தினை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.


















