-சி.ஜெகதீஸ்வரன்-
நெல்லியடி திருமால்சோதி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வர்த்தக நிலையத்தை பூட்டிவிட்டு செற்ற வர்த்தகர் மறுநாள் புதன்கிழமை அதை திறந்த போதே கூரை பிரித்து அங்கிருந்த பொருட்கள் மற்றும் ஒரு தொகைப்பணம் என்பன திருடப்பட்டமை தெரியவந்தது.
இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.


















