-செ.கபிலன்-
வல்லை சந்தியில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சுவேலிப் பகுதியில் போதை மாத்திரைகளை வாங்கி கொண்டு செல்லும் போதே வல்லை சந்தியில் வைத்து பொலிஸாரால் இவர்கள் துரத்தி பிடிக்கப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் சிறுப்பிட்டி மற்றும் உரும்பிராய்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களின் உடைமையிலிருந்து மொத்தமாக 7 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.


















